Sunday, 21 February 2010

மதம் ஒழிந்து மனிதமாகட்டும்!

கோயில்களையும்...
மசூதிகளையும்...
சர்ச்சுக்களையும்...
சுவடு தெரியாமல்...
ஒழித்துக் கட்டுவோம்...!

கடவுளின் நகைகளை...
ஏழைகளின் குடில்களாக்குவோம்...!

ஓதுவோர்களையும்...
தந்திரங்கள் செய்வோரையும்...
வைத்தியச் சாலைக்கு அனுப்புவோம்...!

கடவுள் சிலைகளை...
காட்சிப் பொருள்களாக்குவோம்...!

அவை முன்னோர்களின்...
முட்டாள்தனத்தின் அடையாளமென...
இனிவரும் சந்ததியினருக்கு...
அடையாளப்படுத்துவோம்...!

தமிழச்சி (tamizachi.com)

நிரந்தர அடிமைகள்..

எங்களுக்கு திருமணம் அன்று...
திருமரணமும் நடக்கிறதே... !

சிசுவாக இருந்த போது...
குடித்த முலைப்பாலுக்கு...
விலைகொடுக்கிறான் வந்தவன்.... !

என்னைப்பெற்றவனோ...
ஊரைக்கூட்டி வந்தவனுக்கு...
பொன்னும், பொருளையும்...
தட்சணையாக கொடுத்து...!

அவன் கையில்...
எங்கள் கைகளை வைத்து...
பெற்றவள் எள்ளுத்தண்ணீர் விட்டு...
எங்களை தாரை வார்க்கிறாள்...
ஈவு ஈரக்கமில்லாமல்...!

இனி நாங்கள்...
வந்தவனுக்கு அடிமைகள்...!
ஆயுள் கைதிகள்....
நிரந்தர அடிமைகள்...!

இதுதான் பெண்களுக்கு...
சமூதாயம் கொடுக்கும்...
கௌரவ அங்கீகாரம்...!

தமிழச்சி (tamizachi.com)
28.10.2009

சமட்டியடி

எனக்கு பசித்த போது...
சமைத்து போட வேண்டும்...!
குளிப்பதற்கு சுடுநீர்...
வைத்து கொடுக்க வேண்டும்...!
அழுக்கான உடையை...
துவைத்துப்போட வேண்டும்...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

என் ஆண்மைக்கு வாரிசாக...
பிள்ளை பெற்றுப் போட வேண்டும்...!
நான் அடித்தால் அடிவாங்கிக் கொண்டு...
அடங்கிப் போக வேண்டும்...!
என் பெற்றோருக்கும்...
ஏவல் செய்ய வேண்டும்...!
எங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்...
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

என் குறி விரைத்துக் கொண்டால்...
உன்னிடமும் வரும்...
தேவைப்பட்டால் மற்றவரிடமும் செல்லும்...
என் குறிக்கு கற்பு கிடையாது...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

மொத்தத்தில்...

எனக்கென்ற தனித்துவம் இருக்கின்றது...!
வலிமை இருக்கிறது...!
அடக்கி ஆளும் தலைமை இருக்கின்றது..!
எனக்குள் எல்லாம் இருக்கிறது...!
உன்னைவிட நானே உயர்ந்தவன்...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

தமிழச்சி (tamizachi.com)
28.10.2009