Sunday, 21 February 2010

சமட்டியடி

எனக்கு பசித்த போது...
சமைத்து போட வேண்டும்...!
குளிப்பதற்கு சுடுநீர்...
வைத்து கொடுக்க வேண்டும்...!
அழுக்கான உடையை...
துவைத்துப்போட வேண்டும்...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

என் ஆண்மைக்கு வாரிசாக...
பிள்ளை பெற்றுப் போட வேண்டும்...!
நான் அடித்தால் அடிவாங்கிக் கொண்டு...
அடங்கிப் போக வேண்டும்...!
என் பெற்றோருக்கும்...
ஏவல் செய்ய வேண்டும்...!
எங்களுக்கு அடிமையாய் இருக்க வேண்டும்...
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

என் குறி விரைத்துக் கொண்டால்...
உன்னிடமும் வரும்...
தேவைப்பட்டால் மற்றவரிடமும் செல்லும்...
என் குறிக்கு கற்பு கிடையாது...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

மொத்தத்தில்...

எனக்கென்ற தனித்துவம் இருக்கின்றது...!
வலிமை இருக்கிறது...!
அடக்கி ஆளும் தலைமை இருக்கின்றது..!
எனக்குள் எல்லாம் இருக்கிறது...!
உன்னைவிட நானே உயர்ந்தவன்...!
ஏனெனில் என்னிடம் இருப்பது ஆண்குறி...!

தமிழச்சி (tamizachi.com)
28.10.2009

No comments:

Post a Comment