Friday, 16 April 2010

Ambedkar Movie 3

Watch live streaming video from meenakam at livestream.com

Ambedkar Movie 4

Watch live streaming video from meenakam at livestream.com

Ambedkar Movie Part 5

Watch live streaming video from meenakam at livestream.com

Saturday, 10 April 2010

33 சதவீதமாம் மண்ணாங்கட்டியாம்!

பெரியாரின் அன்றே சொல்லியது!

அலுவலகத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் ஆண் குழந்தைதான் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று அதிக குழந்தை பெற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்,இல்லை பெண் குழந்தை பெற்றால் அவளை இரண்டாம் தரத்தில் வைத்து பார்க்கவும் மாட்டார்கள்.

இந்த பதிவில் உள்ள பெரியாரின் நேர்காணலின் ஒலி இணைப்பை பாருங்கள்.

பெண்ணுரிமை மற்றும் கருத்தடை பற்றி பெரியாரின் பார்வையில்!

Contraception-Periyar E.v. Ramsamy

Saturday, 3 April 2010

பெரியார் தனது சமுதாய இழிவு ஒழிப்பு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொள்ளும் முன் தியாகராய நகரில் ஆற்றிய பேருரை!

பெரியார் தனது சமுதாய இழிவு ஒழிப்பு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொள்ளும் முன் தியாகராய நகரில் ஆற்றிய பேருரை. 95 வயது வரை வாழ்ந்த அந்த சமுதாய சிங்கம் கடைசி மூச்சு வரை இந்திய சமுதாயத்தில் உள்ள இழிவுகளை ஏற்ற தாழ்வுகளை அடியோடு ஒழிக்க போராடினார். அந்த போராட்டங்களால் பலன் பெற்ற/சுயமரியாதை பெற்ற/கல்வி பெற்ற பலர் இன்று பெரியார் யார் என்று கேட்கும் நிலை அல்லது பெரியாரை கடவுள் மறுப்பாளர் என்றும் வட்டத்திற்குள் அடைப்பது போன்ற பெரும்பழிக்கு உரியவர்கள் ஆவார்கள்!

நிறை வயது வாழ்ந்துவிட்டே இப்புவி மேல் ஓய்வறிய பகுத்தறிவு பகலவன் ஓய்வு கொண்டரெனினினும், தாஜ்மஹால் திடுமென்று தரைக்குள் புதைந்துவிட்டால் அதனை கட்டி ஆண்டுகள் பல ஆயிற்றே என்று ஆறுதல் தான் பெறுவோமா? தஞ்சை கோபுரம் சாய்ந்துவிட்டால் அதற்கு வயது அதிகம் என்று சொல்லி தாங்குதல் தான் எளிதாகுமோ? இவரோ தஞ்சை கோபுரம் போல் உயர்ந்தவர் ஈடு இணையற்ற வாழ்வு வாழ்ந்து சரித்திரம் படைத்தவர், அவர்தாம் ஈரோடு ஈன்றெடுத்த பகுத்தறிவு சிங்கம் பெரியார்!

அவர் கருஞ்சட்டைகளை நம்பி விட்ட போன பணிகளை இன்றைய பகுத்தறிவு ஊட்டப்பட்ட இளைய சமுதாயம் கையிலெடுத்து பெரியார் கண்ட இழிவுநிலையற்ற சமுதாயம் அமைக்க வழி செய்யவேண்டும்! அதற்கு பெரியாரின் பேச்சுகள் எழுத்துகளை படித்து அவர் கூறிய கருத்துகளை ஆழசிந்தித்து புரிந்துகொண்டு அதனை தனது சொந்த வாழ்வில் கடைபிடிக்க முயற்சி செய்யவேண்டும்!



Friday, 2 April 2010

பெரியார் பேசிய பெண்ணுரிமை!

பெரியார் களஞ்சியம் தொகுதி 5-இல் 129-வது பக்கத்தில் "எஜமான் அடிமையை விட மோசமானது பெண்ணடிமை" என்ற தலைப்பில் 26.01.1931-ஆம் ஆண்டில் ஈரோடு தாலுகா பெருந்துறைக்கடுத்த கிரே நகர் சிற்றூரில் நடைப்பெற்ற ஆதிதிராவிடர் ஆண்டு விழாவில் பெரியார்....

"பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி கீழ்ஜாதிக்காரனை மேல் ஜாதிக்காரன் நடத்துவதை விட, பணக்காரன் ஏழையை நடத்துவதைவிட, எஜமான் அடிமையை நடத்துவதை விட மோசமானதாகும் என சொற்பொழிவை தொடங்குகிறார்

நான் எத்தனை பொண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுவேன். எத்தனை கிழவனானாலும் எனக்குப் பொண்டாட்டி வேண்டும். நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டு அனுபவிப்பேன். ஆனால் பெண்ணாய்ப் பிறந்த நீ ஒரு புருஷன்தான் கட்டிக் கொள்ள வேண்டும். அவன் செத்துப்போனாலும் புருஷன் என்பதாக ஒரு ஜீவன் உலகில் உண்டு. ஆண் பெண் சேர்ந்து அனுபவிக்கும் இன்பம் என்பதாக ஒரு குணம் உண்டு என்பதை மறந்துவிட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கும் கடவுள், மதம், முன்ஜன்மப் பலன் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது மிகவும் அநீதியும், அயோக்கியத்தனமுமான விஷயமாகும். இந்தக் கொடுமைகளை ஆண்களால் மாற்றிக்கொள்ளலாம் என்றும், பெண்கள் அப்படி மாற்றிக் கொள்ள நினைப்பது சுத்த முட்டாள்தனமாகும் எனக் கருதப்பட்டிருக்கின்றது என்கிறார் பெரியார்.

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்தால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டு போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு இருவருக்கும் கஷ்டமேயிருக்காது. சிலர் இப்படிச் சொல்வது தப்பு என்றும் ஒழுக்கம் கெட்டுப் போகும் என்றும் ஆண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் புத்தி சொல்லுங்கள் என்றும் சொல்ல வருவார்கள். ஆண்களுக்குப் புத்தி அநேக காலமாக சொல்லியாய் விட்டது. கல்யாணம் செய்து கொள்ளுவதே அடிமைப்பிரவேசம் என்றாய்விட்டது. ஒரு மனிதனாவது இவர்கள் சொல்லுகிறபடி யோக்கியனாகவில்லை.

ஆகவே அது இனி பயனற்றதாய் விட்டதால்தான் வேறு மார்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதாய் விட்டது. இதுவரையில் ஆண்கள் பெண்களை அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொல்லிப் பெண்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டோம். பலனேற்படவில்லை என்று கண்டு விட்டோம். இப்போது நாம் பெண்களிடம் சென்று இனி ஆண்கள் உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று சொல்லுகின்றோம். இதனால் என்ன தப்பு என்பது விளங்கவில்லை. இதுபோல்தானே ஆண்கள் உங்களை வஞ்சித்தால் நீங்கள் அவர்களை வஞ்சியுங்கள் என்று சொல்லுகின்றோம். இஷ்டப்பட்டவர்கள் இந்த முறையில் சேர்ந்து வாழட்டும். இஷ்டமில்லாதவர்கள் கல்யாணத்தை ரத்து செய்து கொண்டு தனித்தனி வாழட்டும். இதனால் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும்? ஆகையால் இந்த விஷயங்களில் பெண்கள் யோசித்து தைரியமாய் முன்னுக்கு வரவேண்டும். பயப்படக்கூடாது. பெண்கள் தங்கள் வாழ்வுக்கு ஒரு வகை செய்து கொள்ள வேண்டியது பெண்கள் விடுதலைக்கு முக்கியமான அஸ்திவாரமாகும். என்கிறார் பெரியார்.


Bookmark and Share