பெரியார் தனது சமுதாய இழிவு ஒழிப்பு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொள்ளும் முன் தியாகராய நகரில் ஆற்றிய பேருரை. 95 வயது வரை வாழ்ந்த அந்த சமுதாய சிங்கம் கடைசி மூச்சு வரை இந்திய சமுதாயத்தில் உள்ள இழிவுகளை ஏற்ற தாழ்வுகளை அடியோடு ஒழிக்க போராடினார். அந்த போராட்டங்களால் பலன் பெற்ற/சுயமரியாதை பெற்ற/கல்வி பெற்ற பலர் இன்று பெரியார் யார் என்று கேட்கும் நிலை அல்லது பெரியாரை கடவுள் மறுப்பாளர் என்றும் வட்டத்திற்குள் அடைப்பது போன்ற பெரும்பழிக்கு உரியவர்கள் ஆவார்கள்!
நிறை வயது வாழ்ந்துவிட்டே இப்புவி மேல் ஓய்வறிய பகுத்தறிவு பகலவன் ஓய்வு கொண்டரெனினினும், தாஜ்மஹால் திடுமென்று தரைக்குள் புதைந்துவிட்டால் அதனை கட்டி ஆண்டுகள் பல ஆயிற்றே என்று ஆறுதல் தான் பெறுவோமா? தஞ்சை கோபுரம் சாய்ந்துவிட்டால் அதற்கு வயது அதிகம் என்று சொல்லி தாங்குதல் தான் எளிதாகுமோ? இவரோ தஞ்சை கோபுரம் போல் உயர்ந்தவர் ஈடு இணையற்ற வாழ்வு வாழ்ந்து சரித்திரம் படைத்தவர், அவர்தாம் ஈரோடு ஈன்றெடுத்த பகுத்தறிவு சிங்கம் பெரியார்!
அவர் கருஞ்சட்டைகளை நம்பி விட்ட போன பணிகளை இன்றைய பகுத்தறிவு ஊட்டப்பட்ட இளைய சமுதாயம் கையிலெடுத்து பெரியார் கண்ட இழிவுநிலையற்ற சமுதாயம் அமைக்க வழி செய்யவேண்டும்! அதற்கு பெரியாரின் பேச்சுகள் எழுத்துகளை படித்து அவர் கூறிய கருத்துகளை ஆழசிந்தித்து புரிந்துகொண்டு அதனை தனது சொந்த வாழ்வில் கடைபிடிக்க முயற்சி செய்யவேண்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment